Tuesday 17 June 2014

Story 5: மாலதிக்குள் ஓர் மர்மம்.

மாலதிக்குள் ஓர் மர்மம்.

நிலா இறந்து விட்ட ஓர் இரவு... மணி பன்னிரண்டை தாண்டி பேய் உலாவும் நேரம். றஞ்சி வயிற்று வலியில் அலறுகிறாள். அப்பத்தான் கணவன் மிதுனன் வீட்டுக்கு வருகிறான். றஞ்சிக்கு கண்ணீர் கன்னத்தை கழுவிக்கொண்டிருந்தது. ஒரு ஆற்றை கடந்து இரன்டு சந்திகள் கடந்து மூண்று மூலைகள் கடந்து றஞ்சியை மிதுனன் டாக்டரிடம் கூட்டி வந்திட்டான்.

முதல் குழந்தை சுகப்பிரசவமாக பிறப்பது என்பது முடியாத ஒன்றுதான் என்றாலும் குழந்தை சுகமாகவே பிறந்தது. ஊழியர்கள் குழந்தையை கண்ணாடி பெட்டிக்குள் கொண்டு செல்லவும் மிதுனன் குழந்தைக்கு பின்னால் ஓடினான். மிதுனன் விருப்பப்பட்டது போலவே குழந்தை பெண் குழந்தை... ஆசைப்பட்டது கிடைக்கும் போது தேக்கி வைத்திருந்த கனவுகள் நெஞ்சை குளிர வைக்கும் .முன்னரே யோசித்து வைத்திருந்த "மாலதி" என்ற பெயரை குழந்தைக்கு வைக்கனும் என்று மிதுனன் உள்ளுக்குள் யோசிக்கின்றான்.

நீங்கள் நினைப்பீர்கள் மாலதி மிதுனனின் இள வயது காதலி என்று ஆனால் அப்படி அல்ல என்று சொல்லுவதற்கும் இல்லை இது ஒரு மாறுபட்ட மர்மம்.

மிதுனனுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. எந்த விடையத்துக்கும் பாரபட்சம் காட்டவே மாட்டான். மிதுனனின் முதல் காதலி பள்ளிக்கூட தேவதை இட்லி போல சொக்கை வைச்ச மாளவிகா...

மிதுனனை விட மாளவிகா மூணு வயது மூப்பு என்றாலும் ஆரம்பத்தில் அக்கா அக்கா என்று அலட்டியவன் நாளடைவில் காதலிக்க ஆரம்பித்திட்டான்.. காதலை ஏற்று கொள்ளாத மாளவிகா மிதுனனின் சில கவிதைகளை ஏற்று கொன்டதுண்டு. மாளவிகாவை பாக்கிறதுக்கு மட்டுமே பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தான். ஆனால் மாளவிகா ஏற்கனவே கூட படிக்கிற பையனை விரும்பி இருந்தாள் இந்த விடையம் தெரிய வர மிதுனனே ஒதுங்கிட்டான். ஆனாலும் உள்ளுக்குள் சின்னதால் காதல் தோல்விதான்.

மாளவிகாவின் நினைவுகளோடு மட்டும் வாழ்ந்து கொண்டிருந்த மிதுனனுக்கு பல்கலைக்கழகத்தில் லதுசாவின் அறிமுகம் கிடைத்தது. லதுசாவை அழகென்று சொல்லுவதை விட அறிவான பொண்ணு அந்த அறிவு லதுசாவுக்கு றொம்ப அழகு. பார்த்தா அப்பாவி மாதிரி எல்லோருக்கம் பிடிக்ககூடிய பேச்சுதிறன் மிதுனன் லதுசாவை உள்ளுக்குள் நேசிக்க ஆரம்பித்தான். வெளியில் சொல்லாத காதலோடு வாழ்தவன் ஒரு நாள் தனியா கூப்பிட்டு தன் காதலை சொன்னான் அதுக்கு லதுசா யோசிச்சு சொல்றன் என்றாள். பாட்டியின் மரண வீட்டக்கு போயிட்டு இரண்டு வாரம் கழித்து மிதுனன் பல்கலைக்கழகம் வர லதுசா தொலைபேசியில் தொங்கிக்கொண்டிருந்தாள். மிதுனனை திரும்பிக்கூட பார்ப்பதில்லை வேனும் என்று மிதுனன் முன்னுக்கே போனில் யாரோடோ செல்லமாக அலட்டிகொண்டிருப்பாள். மிதுனனின் இரண்டாவது காதலும் திண்டாடிப்போனது.

பல்கலைக்கழகம் முடிந்ததும் மிதுனனுக்கு வாத்தியார் வேலை கிடைத்தது. கற்க்க போன இடத்தில்தான் இதுவரை மிதுனன் காதலித்தான் என்றால் இப்போது கற்ப்பிக்க போன இடத்திலும் காதலிக்க ஆரம்பித்தான் . திவ்யா ரீச்சரை பார்த்தா காதலிக்க தோனும். அந்த அழவுக்கு அழகி. வெட்க்கப்படாம காதலை உடனே திவ்வியாக்கு சொல்லிட்டான். காதலை ஏற்றுக்கொள்வதற்கு திவ்வியாக்கு மூண்று மாதங்கள் வரை தேவைப்பட்டதென்றாலும் ஏற்றுக்கொண்ட அடுத்த நிமிடமே கல்லூரிக்கே தெரிய வந்தது.. இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிட போறது ஓய்வு நேரத்தில ஒன்னா இருக்கிறது ஓடைக்குள் நின்று கை காட்டுறறு. யாரும் பார்க்காத சந்தர்ப்பத்தில் கண் அடிக்கிறது இப்படி கல்லூரி வழாகமே திவ்யா ரீச்சரின் காதல் அட்காசத்தை அவதானித்து கொண்டிருந்தது. மிதுனனுக்கு ஒரு நல்ல பொண்ணு கிடைத்திருக்கிறது என்று நண்பர்களும் பிரியப்பட்டார்கள். லீவுக்கு ஊருக்கு போன திவ்யா ரீச்சர் திரும்பி கல்லாரிக்கு வரவேயில்லை...வேலையையும் விட்டிட்டு மிதுனனையும் விட்டுட்டு வெளிநாட்டில இருந்து வந்த மச்சானை மணந்திட்டா... மிதுனனை ஏன் தான் ஏமாத்தினா என்பது இதுவரைக்கும் தெரியாது. மிதுனனுக்கு ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு காதல் இருந்ததே தவிர கடைசி வரைக்கும் ஒரு காதலி இருக்கவில்லை...

காலம் கடக்க கடக்க மிதுனனின் அம்மா பாத்து கட்டிவைச்ச பொண்ணுதான் றஞ்சி ... இப்ப மிதுனன் ஒரு குழந்தைக்கு அப்பாவாகியும் விட்டான். காதல்கள் எல்லாம் காணாமல் போய் விட்டது.

ஆரம்பத்திலே சொன்னேன் மிதுனன் பாரபட்சம் பார்க்காதவன் என்று மாளவிகாவில் வருகின்ற "மா" வும் லதுசாவில் வருகிற" ல" வும் திவ்யாவில் வருகிற "தி" யும் சேர்த்து குழந்தைக்கு "மாலதி" என்று குழந்தைக்கு பெயர் தயாரிக்கிறான்.

குழந்தையை மெதுவாய் தடவிக்கொண்டு மனைவியை நோக்கினான் வைத்தியார் அதிர்சி வார்த்தையை துப்பினார். சின்ன உசிரை மட்டும்தான் காப்பாற்ற முடிந்தது . பெரிய உயிர் மேல போயிட்டு . பிரசவத்தின் போது மிதுனனின் மனைவி றஞ்சி உயிரை விட்டுட்டா....
"
இப்படி போயிற்று மிதுனனின் வாழ்க்கை"

காதலிகளின் நினைவுகளை நெஞ்சோடு வைத்திருக்கும் ஆண்களை மணம்முடித்து மனைவியாக வாழ்ந்து முடிப்பது என்பது மறுபிறவி எடுப்பதற்கு நிகர். 

No comments:

Post a Comment