Monday 28 July 2014

Story 102: அழைப்பு



அழைப்பு
அவளது வீட்டின் கண்ணாடி முன் அமர்ந்து கொண்டு தனது அழகான பொன் நிற விரல்களால் அவளது தங்கக் காதணியை மெதுவாக அணிகிறாள். அது அவளின் காதுக்காகவே பிறந்தது போல அப்படி ஒரு அம்சம். ஒரு மிகவும் மெலிதான செயின்ல் காதலின் சின்னமான இதயத்தை தன் இதயத்தோடு அணிவது போல் அணிகிறாள். அழகான வெள்ளி நிலவை சிறியதாய் செய்து அதற்கு சிவப்பு நிறம் பூசியதுபோல் ஒரு அழகான பொட்டு ஒன்றை அவள் குண்டு குழி இல்லாத ஹைவேஸ் ரோடு போல் உள்ள அகல நெற்றியில் வைக்கின்றாள்.

அன்று ஏன் என்று தெரியவில்லை, அவள்  மையிட்ட கண்கள் வெட்கத்தில் கவிதைகள் சொல்லத் துடித்தது. உதடுகள் தனது சந்தோஷத்தை விவரிக்க முடியாமல் நடுங்கிக் கொண்டு இருந்தது. பெரிய பூரிப்பு, அளவு கடந்த எதிர்பார்ப்பு, புருவத்தை உயர்த்தி இது நான் தானா என்று கண்ணாடியில் பார்த்து கேட்கும் அளவுக்கு அவள் மேல் அவளுக்கே சந்தேகம். அவள், தான் வெட்கப்படுவதை தானே பார்த்து ரசிக்க, அவளின் மொபைலில் காமெராவை ஆன் செய்து  தனக்குத் தானே ஒரு புகைப்படம் எடுக்கிறாள். அந்த புகைப்படத்தைப் பார்த்து ஒரு அழகான மெல்லிய சிரிப்பை வெளியிடுகிறாள்.

அப்பொழுது அந்த மொபைலைப் பார்த்துக் கொண்டு, " இந்த பதிலை சொல்லத் தானே நீ இவ்வளவு நாள் காத்துகிட்டு இருந்த, இன்னைக்கு அதற்கான நேரம் வந்திருக்கு" என்று சொல்லிவிட்டு வெட்கத்தால் இரண்டு முறை தனக்கு தானே சிரித்து கொள்கிறாள். "நீ எப்படி இதுக்கு ரியாக்ட் பண்ணப்போறேன்னு எனக்கு பாக்கனும்னு தோணுது" என்று சொல்லிக் கொண்டே இரு கண்களையும் இருக்கி நினைவு கோருவது போல் செய்த பின் தனது ஆர்வத்தை வெளியிடுகிறாள்.

கொஞ்சம் எழுந்து நடந்து கொண்டே  தனது மொபைலில் அவளுடைய காதலனின் நம்பருக்கு டயல் செய்கிறாள். ரிங் போகிறது. உதடுகளை விட அவளுடைய கண்கள் அதிகமாக பேசுகின்றன.  ஃபோனை எடுத்த அவள் காதலன் "ஹாய்" என்று ஆச்சரியத்தில் சொல்வது போல் பேசினான், அதற்கு அவள் தனது மெல்லிய குரலில் கொஞ்சம் வெட்கம் கலந்து "நீ இவ்வளவு நாள் எதிர்பார்த்த விஷயத்தை உன்கிட்ட சொல்லனும்னு ஆசைப்படுகிறேன்" என்று சொல்கிறாள். அதற்கு காதலன் "ஹ்ம்ம் ஒரு நிமிஷம், டிரைவ் பண்ணிட்டு இருக்கேன் " என்று அவசரத்தில் பேசுவது போல் பேசுகிறான். திடீரென்று ஃபோன் கட் ஆகிறது. 

அவள் முகத்தில் சிறு ஏமாற்றம், சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் தவிக்கிறாள், ஃபோனை கட்டில் மேலே தூக்கி எறிகிறாள். மறுபடியும் ஃபோனை எடுத்து டயல் செய்கிறாள், மிக நீண்ட டயல் டோனுக்கு பிறகு அவள் காதலன் அந்த அழைப்பைஅட்டெண்ட் செய்து " ஒரே ஒரு நிமிஷம்" என்று சொல்லி முடிப்பதற்குள் திரும்பவும் கட் ஆகிறது. வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற அவள், திரும்பவும் முயற்சிக்கிறாள். அது மிக நீண்ட ரிங்காக சென்று பின்னர் கட் செய்கிறாள். அப்பொழுது அவன் நம்பரில் இருந்து அழைப்பு வருகிறது, மகிழ்ச்சியில் இமய மலையின் உச்சிக்கே சென்றாள். கால் அட்டெண்ட் செய்தாள். அங்கே வேற ஒரு குரல் பேசுகிறது. அவசர அவசரமாக "மேடம் இப்ப இந்த நம்பர்ல வந்த ஃபோன் அழைப்பை அட்டெண்ட் பண்ண ட்ரை பண்ணி லாரியில் மோதி இறந்து விட்டார் இவர், அவருடைய வீட்டு முகவரி கொடுங்களேன்". அதிர்ச்சியில் உறைந்தாள் அவள்.

No comments:

Post a Comment