Thursday 31 July 2014

Story 123: மனைவி



மனைவி

திருச்சியிலிருந்து  வினோத் போன் பண்ணி இருந்தான், என் பையன் அவனிடம் என் மொபைல் எண்ணை கேட்டதாகவும் அவனிடம் என் மொபைல் எண்னை தரலாமா எனக் கேட்டு எனக்கு வினோத் போன் பண்ணியிருந்தான். நான் என் குழந்தைகளை பார்த்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகப் போகிறது, என் நினைவுகளை பின்னோக்கி செலுத்தினேன்.


நான் அப்போது வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தேன். எனக்கு கல்யாணம் ஆகி பத்து வயதில் பையனும் எழு வயதில் பெண்ணும் இருந்தார்கள் என் மனைவி பிரியாவும் மிக சந்தோசமாகத்தான் இருந்தோம் ஆம் அப்படிதான் நான் நினைத்து இருந்தேன் மணி என் குடும்பத்தில் நுழையும் வரை.

மணி என் குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்து செல்லும் வேலைக்கு நான்தான் அமர்த்தினேன் சில மாதங்களில் அவன் என் குடும்பத்துடன் மிக நெருங்கி பழகிவிட்டான்
என் மனைவி நான் அலுவலகத்தில் இருக்கும்போது வெளியே செல்ல நேர்ந்தால் அவனுடைய ஆட்டோவில்தான் செல்வது வழக்கமானது, இதன் காரணமாக என் மனைவியிடமும் நெருங்கி பழகி விட்டான்.

சில நாட்களிலேய எதோ தப்பு நடப்பதை நான் உணர்ந்துகொண்டேன், ஆனால் அதற்க்குள் காலம் கடந்துவிட்டது மணியோ திருமணம் ஆகாதவன் அவன்  என்ன மாயமந்திரம் செய்தான் என தெரியவில்லை என் மனைவியை அவன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டான் நான் வேலையை முடித்து வரும்போது வேண்டா வெறுப்பாக என் வீட்டை விட்டு வெளியே செல்வான் நான் என் மனைவிடம் பலமுறை சொல்லிவிட்டேன் அவன் நட்பு வேண்டாம் என்று அவள் கேட்டபாடு இல்லை. பிரியாவின் அப்பா அம்மாவை அழைத்து வந்து பேசி பார்த்தேன் வேலைக்கு ஆகவில்லை மணியை என் வீட்டுக்கு வராதே எனகூறிப் பார்த்தேன், அவனோ என்னை அடிக்கவே வருகிறான்

நானோ சிறுவயதிலிருந்து பயந்த சுபாவம் கொண்டவன் சண்டை என்றால் பத்தடி தள்ளி நடப்பேன் இப்போதோ இந்த முரட்டு பயலுடன் மோத வேண்டி இருக்கிறது

இதுவரை என் மனைவியை அடிக்காமல் இருந்த நான் அவளை அடித்தும் பார்த்து விட்டேன் அவளோ என்னையே அடிக்க வருகிறாள்   அக்கம் பக்கத்தினர் கேட்க போய் அது அடிதடி சண்டையில் போய் முடிந்தது, காவல் நிலைய பஞ்சாயத்தில் இரண்டு குழந்தைகள் இருக்கும்போது கணவனுடன் சேர்ந்து இருப்பதுதான் நல்லது என  காவல் ஆய்வாளர் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை  கடைசியில் ஒரு நாள்  குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவன் வீட்டுக்கே சென்றுவிட்டாள் இனி திரும்ப வர போவதில்லை என கடிதம் எழுதிவைத்துவிட்டு,
நான் அங்கு போய் குழந்தைகளை மட்டும் என்னுடன் அனுப்பி வைக்குமாறு கெஞ்சி கேட்டேன் அவன் முடியாது என கூறிவிட்டான்  என் பிள்ளைகளிடம் என்னிடம் வருமாறு கூப்பிட்ட போது அவர்களும் வர மறுத்து விட்டனர்  அம்மாவுடன் இருக்க விரும்புவதாக கூறிவிட்டனர்.

நான் என் குடும்பத்திற்க்கு எந்த குறையும் வைக்காத போதும் என் மனைவி என்னை விட்டு சென்றுவிட்டாள்  என் தவறு எது என்று எனக்கு கடைசி வரை தெரியவில்லை, அவன் என் குடும்பத்தை  முழுமையாக என்னிடம் இருந்து பறித்துக் கொண்டான்.

அடுத்த முறை அவன் வீட்டிற்க்கு போனபோது என்னை அடித்து அனுப்பினான் நான் வெறிக்கொண்டு  ஒரு பிளேடு வாங்கி போய்
அவன் எதிர்பார்க்காத போது   அவன் உடம்பில் சில இடங்களில் கிழித்து விட்டு ஒடி வந்து விட்டேன் சில மாதங்களுக்கு பிறகு அவன் என்னை ஆள் வைத்து அடித்து போட்டான் என்னை கொல்ல வேண்டாம் என என் மனைவி கூறினாளாம் அதனால் என்னை கொல்லாமல் விட்டுவிட்டார்கள், மருத்துவ மனையிலிருந்த என்னை என் அம்மா எங்களின் சொந்த கிராமத்திற்க்கு அழைத்து வந்து விட்டார்கள் நான் முன்று மாதங்கள் படுக்கையில் இருந்தேன்

அதற்க்கு பிறகு நான் திருச்சிக்கே போகவில்லை வேலையை விட்டுவிட்டு  விவசாயத்தில் இறங்கினேன், அதில் ஒரளவு வெற்றியும் பெற்றேன்   என் கிராமத்தில் பல குழந்தைகளை படிக்க வைத்தேன் என் வாழ்க்கை முறையை பெருமளவு மாற்றிக்கொண்டேன் பின்னர்  நான் திருமணமும் செய்துக்கொண்ட்டேன்

மணி என் குழந்தைகளையும் குடும்பத்தையும் நல்லபடியாக பார்த்துக்கொண்டதாக கேள்விப்பட்டேன் ஆனால் அவனுக்கும் என் மனைவிக்கும் குழந்தை எதுவும் இல்லை இது என்ன மாதிரியான காதலோ தெரியவில்லை   அவன் வெகு சுலபமாக என் குடும்பத்தை அபகரித்துக் கொண்டான் . நான் பழைய பிரச்சனைகளில் இருந்து  மீண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது  என்ன ஆனாலும் அவர்கள் என் குழந்தைகள் ஆதலால்  அவர்கள் என்னை சந்திக்க விரும்பினால் நான் அவர்களை சந்திக்கலாம் என நினைக்கின்றேன்

                *************

No comments:

Post a Comment