Saturday 26 July 2014

Story 90:இயற்கையின் நியதி



இயற்கையின் நியதி!!!
காலை 9:30 மணி
நான் ஏன் அப்படி நடந்து கொண்டேன்? நடந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. இன்று நேற்றல்ல அவளுடன் கடந்த ஆறு மாதமாக ஒரே வீட்டில் தங்கிக் கொண்டு இருக்கிறேன். ஒரு முறை கூட இப்படி எனது கட்டுப்பாட்டை மீறியதில்லை. இன்று மட்டும் எப்படி? எவ்வளவு யோசித்தும் எனக்கு விடை கிடைக்கவில்லை. என்னைப் பற்றி என்ன நினைத்து இருப்பாள் அவள்? யோசித்து, யோசித்து தலை வலிக்க,அப்படியே களைப்பாய் சோபாவில் சாய்ந்தேன்.

காலை 9 மணி
கண்ணாடி முன் நின்று அவசர அவசரமாக ஒப்பனை செய்து கொண்டு இருந்த போது என் அறைக்கதவுத் தட்டப்பட
வா சந்தியாதிறந்து தான் இருக்கு
உன் மொபைல் சார்ஜரைக் கொஞ்சம் எடுத்துக்கவா?” என்றவாறே கதவைத் திறந்து கொண்டு வந்த என் அறைத் தோழி சந்தியாவைப் பார்த்தேன்.மழைக்காலத்தில் மேகத்தால் பாதி மூடப்பட்டும், ஜொலிக்கும் வானவில்லைப் போல ஒளிர்ந்தாள். பார்வையை அவளை விட்டு அகற்றாமல், நான் பார்த்துக் கொண்டே இருக்க….
ஹே..என்ன இன்னைக்கு தான் என்னை முதல் தடவை பார்க்கிற மாதிரி பார்க்கிறே?” சந்தியாவின் குரல் என்னைக் கலைத்தது.
ம்ம்ம்….முதல் தடவை தான் பார்க்கிறேன்புடவையிலே..”
 இன்னைக்கு எங்க காலேஜ்ல ஒரு ஃபங்சன். அதுக்குத் தான். நல்லா இருக்கா?” ஒரு மாடலைப் போல புடவை முந்தானையைப் பிடித்துக் காட்டி கேட்டாள்.
உனக்கு சும்மா ஒரு சணல் துணியைப் போர்த்தி விட்டா கூட நல்லா தான் இருக்கும். அவ்வளவு அழகு நீ. புடவையிலே சொல்லவா வேணும்தேவதை மாதிரி ஜொலிக்கிறே!!!” என் பதிலைக் கேட்டு வெட்கத்தில் அவள் கன்னம் சிவந்து அவளை இன்னும் அழகாகக் காட்டியது.
தேங்க்யூஎன்று சொல்லிவிட்டு என் சார்ஜரை எடுத்துக் கொண்டு அவள் அறைக்கு செல்ல திரும்பினாள்.
அப்போது தான் அது நடந்தது. சார்ஜரின் வயர் அங்கே வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை சுத்தி இருக்க, அவள் அதனை கவனிக்காமல் இழுத்ததில் அந்த பாட்டில் தரையில் விழுந்து உருண்டது. அவள் சரியாக அந்த பாட்டிலின் மேல் கால் வைக்க, பேலன்ஸ் தவறி விழப் போனாள். அனிச்சை செயலாய் அவளைப் பிடிக்க நானும் நகர...
அடுத்த நொடி….
புது மணப்பெண் கையில் இருக்கும் மாலையைப் போல என் கையில் அவள். எனது ஒரு கை அவளது புடவை இடைவெளி இடுப்பைப் பற்றி இருக்க, மறு கை அவளின் மிருதுவான மார்புகளைத் தொட்டும், தொடாமலும் அவளை அணைத்தவாறே அருகே இருந்த மெத்தையைப் பற்றி இருந்தது. இருவரது முகங்களும் உதடுகள் உரசும் தூரத்தில். இப்படி ஒரு நெருக்கமான சூழ்நிலை, எனது தொடையை சூடேற்றிக் கொண்டு இருந்த அவளது பின்புறம், என் நாசிக்குள் போதையை ஏற்றிக் கொண்டு இருந்த அவளது நறுமணம்இவை எல்லாம் சேர்ந்து எனது கட்டளையின்றியே எனது உதடுகளை, அவளது உதடுகளோடு சேர்த்தது. மிரட்சியுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவளின் கண்கள் தானாக மூடிக் கொண்டன.
அடுத்த இரு நிமிடங்கள் கழித்து தான், தான் இருப்பதையே நினைவு படுத்தியது எனது மூளை. இருவரும் எழுந்தோம். ஒரு நொடி என்னை உற்று நோக்கியவள் என் கைகளை விலக்கி விட்டு ஒன்றும் பேசாமல் அவளது அறைக்குள் சென்று அவளது கதவை அடைத்துக் கொண்டாள்.

காலை 10:30 மணி
களைத்துப் போய் அப்படியே நான் தூங்கிவிட, “காதல் ரோஜாவேஎன்று என் மொபைல் சிணுங்கி என்னை எழுப்பியது. அதன் திரைகளில்மதன்என்று ஒளிர அதனை அமைதியாக்கினேன். மதனின் பெயரைப் பார்த்ததும் என் மனதில் குற்ற உணர்ச்சியும் சேர்ந்து கொள்ள, எனது தலை வலி அதிகமானது.
அவன் வேறு யாருமல்ல. கல்லூரியில் படிக்கும் காலத்தில் அறிமுகம் ஆகி, பின் என் மனம் கவர்ந்துபாய் பிரண்ட்ஆக பிரமோஷன் வாங்கியவன். எனக்கு பாய் பிரண்ட் இருப்பது சந்தியாவுக்கும் தெரியும். அதனால் தான் அவள் என்னைப் பற்றி என்ன நினைத்து இருப்பாள் என்று ஒரு முடிவுக்கு வர முடியாமல் குழம்பிக் கொண்டு இருக்கிறேன்.

ஆறு மாதத்திற்கு முன்
கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்க பெங்களூர் வந்தேன். தங்குவதற்க்கு இடம் தேடிக் கொண்டு இருந்த போது தான் கல்லூரித் தோழி ஒருத்தியின் மூலம் சந்தியாவின் அறிமுகம் கிடைக்க அவளின் அறையில் அடைக்கலம் புகுந்தேன். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருந்ததாலோ என்னவோ, அவள் இயல்பாகவே நட்பாகவும், கலகலவெனவும் பழக ஆரம்பித்தாள். சிறிது நாட்களிலேயே எனக்கு அவளைப் பிடித்துப் போனது.
அவளிடம் எனக்குப் பிடித்ததே, சமூகம் கொடுத்த கண்களின் வழியே மட்டுமே எதையும் பார்க்காமல், அடுத்தவர்களின் உணர்வுகளின் வழியே இந்த உலகைப் பார்ப்பது தான். உதாரணமாக அன்று, இருவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்தோம். ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய விவாத நிகழ்ச்சி அது.
அவங்களுக்கு என்ன பிடிக்குதோ அதை பண்ணிட்டுப் போக விட வேண்டியது தானே?” அவளது பேச்சைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்த நான்.
ஊரே தப்புனு சொல்ற விசயத்தை, உன்னால மட்டும் எப்படி சரினு ஒத்துக்க முடியுது?”
இதுல என்ன இருக்கு? இந்த சமுதாயம் தப்பு, ரைட்னு போட்டு வைச்சிருக்கிற வரையறைகள்ல எனக்கு நம்பிக்கை இல்லை. யாருக்கும் எந்தக் கெடுதலும் பண்ணாம இருக்கிற வரைக்கும் அடுத்தவங்களோட விருப்பு, வெறுப்புல நம்ம மூக்கை நுழைக்காம இருக்கிறது தான் என்னைப் பொருத்த வரைக்கும் சரி
அப்படினா அவங்க எப்படி வேணா இருக்க அவங்களுக்கு உரிமை இருக்குனு சொல்றியா?”
இல்லைஒவ்வொருத்தருக்கும் உணர்வு-னு ஒண்ணு இருக்கு. அதை மதிச்சு நாம நடந்துக்கணும்-னு சொல்றேன்என்றவளை வியப்புடன் பார்த்தேன்.
சிறிது நாட்கள் கழித்து என்னைப் பார்க்க மதன் ஊருக்கு வருவதாக சொன்ன போது, தயக்கத்துடன் சந்தியாவிடம் சென்று அவனைப் பற்றி சொன்னேன். அவன் அந்த இரண்டு நாட்களும் என் அறையிலேயே தங்க அனுமதித்ததுடன், அவனுடன் சகஜமாகப் பழகி அவனுக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பார்த்துக் கொண்டாள். அதுவரை வெறும் அறைத் தோழியாக இருந்தவள் அன்றிலிருந்து எனது நெருங்கிய தோழியாக ஆனாள்.

காலை 11 மணி:
காதல் ரோஜாவேமறுபடியும் கதறியது எனது மொபைல். அதுவாகக் கதறிப் பின் அமைதி நிலையை அடைந்தது. மேலும் இருமுறை கதறி என் மொபைல் அடங்கவும், சந்தியா அவளது மொபைலை எடுத்துக் கொண்டு அறைக்கதவைத் திறந்து கொண்டு வந்தாள். இம்முறை வானவில்லின் வர்ணங்கள் சற்றே வெளிறி இருந்தது.அவளின் கண்கள் சிவந்து அவள் அழுதிருந்ததை அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்தது.
மதன் போன்ல இருக்கான்என்று என்னிடம் போனைக் கொடுத்துவிட்டு மீண்டும் அறைக்குள் அடைந்தாள்.
இல்லை மதன் கொஞ்சம் தலைவலி... அதுதான் தூங்கிட்டேன்ஃபோன் அடிச்சதை கவனிக்கலை
……
நான் உன்னை அவாய்ட்லாம் பண்ணலை மதன். உண்மையாவே தலைவலி.” கொஞ்சம் எரிச்சலாகவே சொன்னேன்.
……………
இல்லை..வேண்டாம். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாவே சரியாயிடும்
………..
சரி..எந்திரிச்சதும் நானே கூப்பிடறேன்..பை
ஃபோனை சந்தியாவிடம் கொடுப்பதற்காக அவள் அறைக்கதவு வரை சென்ற கால்களுக்கு இருந்த தைரியம், கதவைத் தட்ட கைகளுக்கு இல்லாததால் மீண்டும் கால்கள் ஃசோபாவை சென்றடைந்தன. மறுபடியும் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

மூன்று மாதங்களுக்கு முன்
அலுவலகத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டு இருந்த போது திடீரென தலை சுற்ற….
கண்விழித்துப் பார்த்தபோது, மருத்துவமனையில் இருந்தேன். குளூக்கோஸ் இறங்கிக் கொண்டு இருந்தது.
நோ பிராப்ளம்சரியான தூக்கம், சாப்பாடு இல்லைனு நினைக்கிறேன். குளூக்கோஸ் ரெண்டு பாட்டில் இறங்கினதும் நார்மல் ஆயிடும். அப்புறம் நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்டாக்டர் சந்தியாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். பின் வீட்டுக்கு வந்ததும்,
ஆபிஸ்க்கு ஒரு வாரம் லீவ் சொல்லிடு. நான் போய் கொஞ்சம் ஃப்ரூட்ஸ் வாங்கிட்டு வந்திடறேன்.”
ஹேஒரு வாரமா..சான்சே இல்லைமுடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. இப்பதான் ஜாயின் பண்ணி இருக்கேன். அதுக்குள்ள ஒரு வாரம் லீவு போட்டா, அவ்வளவுதான்வேலையை விட்டே…”
தூக்கிடுவாங்களா?” நான் முடிக்கும் முன்பே அவள் கேட்டுவிட்டு பின் அவளே தொடர்ந்தாள்.
தூக்கிட்டாலும் பரவாயில்லை. வேற வேலை பார்த்துக்கலாம். எனக்கு உன் ஹெல்த் தான் முக்கியம்
எனக்கு ஒண்ணுமில்லை..இன்னைக்கு ரெஸ்ட் எடுத்தா போதும், நாளைக்கு சரியாயிடும்.”
நீ சரிப்பட்டு வர மாட்டே. சரிநீ லீவ் சொல்ல வேண்டாம்..விடுஎன்று சொல்லிவிட்டு எனது மொபைலை எடுத்து எனது மேனேஜருக்கு ஃபோன் செய்து அவளே ஒரு வாரத்திற்கு லீவ் சொல்லி விட்டாள்.
அவளும் அந்த ஒரு வாரத்திற்கு கல்லூரிக்கு செல்லாமல் என்னை நன்றாக கவனித்துக் கொண்டாள். அவளே சமைத்து, சரியான நேரத்திற்கு என்னை சாப்பிட வைத்து, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பழச்சாறு, உலர் பழங்கள் என்று என்னை அவள் கவனித்த கவனிப்பில் மூன்று கிலோ எடை ஏறி விட்டேன்.
எனக்கு எல்லாமே புதிதாக இருந்தது. பெற்றோர்கள் இருவருமே அரசாங்க வேலையில் இருப்பதால், வேண்டிய அளவுக்கு வசதி, கை தட்டினால் வந்து நிற்கும் வேலை ஆள், உடல் நிலை சரியில்லை என்றால் காசு வாங்கிக் கொண்டு சேவகம் செய்யும் நர்ஸ் என்று கடமைக்கு என்னைக் கவனித்துக் கொண்டவர்களைத் தான் இதுவரைப் பார்த்து இருக்கிறேன். எந்தவொரு பந்தமும் இன்றி, எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி என் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இதுவரை யாருமே இப்படி அன்பை பொழிந்ததில்லை. அவள் காட்டிய அதீத அன்பு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் பக்கம் ஈர்க்கத் துவங்கியது.
பின் ஒரு நாள் என் அறையில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு இருந்தேன். அப்போது கதவைத் தட்டி விட்டு வந்த சந்தியா
ஹேஎனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”
சொல்லு சந்தியா..என்ன வேணும்?”
என் பாஸ்போர்ட் தொலைஞ்சு போச்சு, போலீஸ் ஸ்டேசன் வரைக்கும் போகணும். தனியா போக பயமா இருக்கு. நீயும் வர்றியா?” அவளுடன் சென்றேன்
பின் ஒரு நாள்,
அந்த முக்குல இருக்கிற பையனுக போகும் போதும் வரும் போதும் கிண்டல் பண்றாங்க. தனியா போக பயமா இருக்கு. நீ கூட வர்றியா?”
இப்படியே, அதற்குப் பிறகு அவள் எங்கே தனியாக செல்வதாக இருந்தாலும், நானும் அவளுடன் செல்வது வாடிக்கை ஆகி விட்டது. அவளுக்கு துணையாக செல்வதே ஒரு வித இன்பத்தை என்னுள் உருவாக்கியது.
ஒரு நாள் மாலை சினிமாவுக்கு சென்று விட்டு வீடு திரும்ப ஆட்டோவைத் தேடிக் கொண்டு இருந்த போது
ஹேஆட்டோல வேண்டாம்..நடந்தே வீட்டுக்கு போலாமா? என்றாள்
ஆல்ரெடி டைம் ஒன்பது ஆச்சுஇரண்டு கிலோ மீட்டர் நடக்கணும்..உனக்கு பயமா இல்லையா?”
அது தான் என் கூட நீ இருக்கே இல்லை..அப்புறம் எனக்கு என்ன பயம்?” என்றாள்.
இப்படி ஒவ்வொரு முறையும் என் துணையில் அவள் பாதுகாப்பாக உணர, என்னுள் அது வேறு மாதிரியான மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. எனக்குள் தைரியமும், வீரமும் அதிகமாவதை உணர்ந்தேன்.இதுவரை என்னுள் பெண்மையை மட்டுமே உணர்ந்திருந்த நான், சிறிது சிறிதாக எனக்குள் ஒளிந்திருந்த ஆண்மையையும் உணர ஆரம்பித்தேன். அவளை ஆள வேண்டும் என்ற ஆளுமை உணர்வு எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. என்னையே அறியாமல் என் மனதில் இருந்த மதனை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தள்ளி விட்டு என்னுள் அவள் நுழைய ஆரம்பித்தாள்.

இன்று நண்பகல் 12 மணி:
குக்கூ குக்கூஎன்று கடிகாரம் கூவ, பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்தேன்.
பழைய நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது, இன்று காலை நிகழ்ந்த அந்தச் சம்பவம் வெறும் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, ஒரு நொடியில் எனது கட்டுப்பாட்டை இழந்ததால் நிகழ்ந்ததாகத் தோன்றவில்லை. அவளை ஆள வேண்டும் என்று என் ஆழ்மனதில் பதிந்து இருந்த எண்ணங்கள், அதற்கான சூழ்நிலை அமைந்ததும் என் உணர்வுகளைத் தூண்டி, அதை நிறைவேற்றிக் கொண்டதாகவேத் தோன்றியது. ஆமாம் அப்படித் தான் நடந்து இருக்க வேண்டும் என்று என் மனம் கடைசியில் சமாதானம் ஆகியது.
ஆனால், உடனே அடுத்த குழப்பம் ஆரம்பமாகியது. அவளை ஆள வேண்டும், அவள் எனக்கு வேண்டும் என்ற எண்ணத்திற்கு பெயர் என்ன? இதற்குப் பெயர் தான் காதலோ? இது காதலாக இருந்தாலும் இது சரியா? அப்படியே சரியாக இருந்தாலும் அவள் என்னை ஏற்றுக் கொள்வாளா? அப்படி என்றால் நான் மதன் மேல் வைத்திருந்த காதல் பொய்யா? அடுக்கடுக்காக கேள்விக்கணைகள் என்னை நோக்கி வீசப்பட்டன.
இந்த சமூகத்தைப் பொறுத்த வரை, ஒரு ஆண் ஒரு பெண்ணையோ, அல்லது ஒரு பெண் ஒரு ஆணையோ விரும்ப வேண்டும் என்பது தான் இயற்கையின் நியதி. என்னுடைய கருத்தும் அதுவே தான். ஆனால் பிறப்பால் ஆண், பெண் என்று வகைப்படுத்துவதில் தான் இந்த சமூகத்துடன் நான் முரண்பட்டு நிற்கிறேன். பாலினம் என்பது ஒருவரின் எண்ணங்கள், விருப்பங்களால் முடிவு செய்யப்பட வேண்டுமே தவிர, ஒருவரின் பிறப்பால் முடிவு செய்யப் படக் கூடாது என்பதே எனது எண்ணம்
அதன் படி, இதுவரை ஒரு பெண்ணாக மதனைக் காதலித்துக் கொண்டு இருந்திருக்கிறேன்.எப்பொழுது ஆணாக உணர ஆரம்பித்தேனோ அப்பொழுதே சந்தியாவை விரும்ப ஆரம்பித்து இருக்கிறேன். பிறப்பால் என் பாலினத்தை முடிவு செய்யும் இந்த சமூகத்தைப் பொறுத்த வரையில் வேண்டுமானால் இதில் ஏதோ ஒன்றில் நான் இயற்கையின் விதிகளுடன் முரண்பட்டு நிற்பதாகத் தோன்றலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் இயற்கை நியதிப்படியே என் வாழ்க்கைப் பாதை அமைந்து இருப்பதாக நம்புகிறேன். இதை யாரால் புரிந்து கொள்ள முடிகிறதோ இல்லையோ, சந்தியாவினால் புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
என் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் சரியான விடை கிடைத்துக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது. அவை அனைத்தும் சந்தியாவின் மேல் நான் கொண்டிருக்கும் காதலை எனக்குத் தெளிவாக உணர்த்தியது.  சந்தியாவின் நினைவுகள் மீண்டும் என் மனதை நிறைக்கத் துவங்கின. என்னைப் போலவே, சந்தியாவிற்கும் என் மேல் விருப்பம் இருக்குமோ? அவளும் மனசாட்சியுடன் இப்படித் தான் போரிட்டுக் கொண்டு இருப்பாளோ? என்ற எண்ணம் தோன்றவே, விடை அறிய சந்தியாவின் அறையை நோக்கி நகர்ந்தேன்.
அவள் அறைக்கதவைத் தட்ட என் கையை உயர்த்திய அதே நேரத்தில், சந்தியா கதவைத் திறந்தாள் இதனை சற்றும் எதிர்பார்க்காத நான்
சந்தியாஅதுவந்து…. நான் அப்போசாரிநான் உன்னை லவ்….”  தடுமாறிக் கொண்டு இருக்க,
லவ் யூ டியர்என்று சந்தியா பாய்ந்து என் உதட்டுடன் அவள் உதட்டைப் பதித்த அதே நொடியில் அவள் அறையின் கண்ணாடி ஜன்னல் நனைந்து வெளியே மழை துளிர்ப்பதை உணர்த்தியது.
-முற்றும்.

No comments:

Post a Comment